×

அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு அளித்த பதவிநீட்டிப்பு செல்லாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு அளித்த பதவிநீட்டிப்பு செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்தியன் ரெவின்யூ சர்விஸ் அதிகாரியான எஸ்.கே.மிஸ்ராவை, கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி 2 ஆண்டுகள் பணிக்காலம் என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை இயக்குனராக மத்திய அரசு நியமித்திருந்தது. 2018-ல் ஆமலாக்கத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்ட மிஸ்ரா, உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பல முறை பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறார். மிஸ்ராவுக்காக விதிகளை திருத்தியும், தளர்த்தியும், முன்தேதியிட்டும் பல்வேறு முனைப்புகளை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டது.

தற்போது வரை எஸ்.கே.மிஸ்ரா தான் அமலாக்கத்துறை இயக்குனராக நீடித்து வருகிறார். இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, அமலாக்கத்துறை இயக்குநராக இருக்கும் மிஸ்ராவின் பதவிக் காலத்தை நவம்பர் மாதத்துக்குப் பின்னர் நீட்டிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு உறுதி அளித்திருந்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை விரிவாக நடைபெற்றது.

அப்போது, எஸ்.கே.மிஸ்ராவுக்கு ஒன்றிய அரசு ஓராண்டு காலம் பதவிநீட்டிப்பு கொடுத்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 3வது முறையாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது 2021ல் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என நீதிபதிகள் தெரிவித்தனர். நவம்பர் மாதத்திற்கு பிறகு மிஸ்ரா பதவியில் நீடிக்கமாட்டார் என ஒன்றிய அரசு தெரிவித்திருந்த கருத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஜூலை 31ம் தேதி வரை மட்டுமே எஸ்.கே.மிஸ்ரா பதவியில் நீடிக்கலாம் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஒன்றிய அரசுக்கு பின்னடைவு:

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒன்றிய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமலாக்கத்துறை தலைவர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கக்கூடாது என 2021ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி 3-வது முறையாக எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்பட்டது.

The post அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு அளித்த பதவிநீட்டிப்பு செல்லாது: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Department of Enforcement ,S. K.K. Misra ,Supreme Court ,Delhi ,K.K. ,Mishra ,Indian Revinue ,Enforcement ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...